Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை உடனடியாக நீக்குமாறு கோரி மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக அப்பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்; மேற்படி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீட மாணவர் குழுக்களுக்கு 03, 06, 09 மாதங்கள் என்ற அடிப்படையில் நிர்வாகத்தால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்;தடையை நீக்குமாறு கோரி நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளபோதிலும், தடை நீக்கப்படவில்லையென மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடிப்படை வசதிக்குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றைக் சீர்செய்ய முன்வராத நிர்வாகத்தினர் மாணவர் மீது வகுப்புத்தடையை விதிப்பதாகவும் அம்மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீனமாக நடந்;துகொண்ட மாணவர்கள் 24 பேர் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வகுப்புத்தடை விதிக்கப்பட்டதாகவும் அடுத்த 02 மாதகாலத்தில் அனைவர் மீதான தடைக்காலம் முடிவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago