2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறை தீக்கிரை

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், ஏறாவூர் கோட்டப்பிரிவிலுள்ள ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலுள்ள  இரு வகுப்பறைகளில் நேற்றுமுன்தினம்  தீ பரவியதையடுத்து,  தீயினைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 இதனால், இந்தப் பாடசாலையின் இரண்டு வகுப்பறைகளிலுமுள்ள அலுமாரிகள், கதிரைகள், மாணவர்களுக்கான வங்கி ஆவணங்கள், பரீட்சை வினாத்தாள்கள் உட்பட இன்னும் பல ஆவணங்களும் எரிந்துள்ளதாக தெரிவிக்கும் ஏறாவூர் பொலிஸார்,தீ பரவியதையடுத்து உடனடியாக விரைந்து செயற்பட்ட பாடசாலை நிருவாகத்தினர், தீ பாடசாலையின் ஏனைய வகுப்பறைகளுக்கும் கட்டடங்களுக்கும்  பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்தனர்.

தீ பரவிய வகுப்பறைக்கு  அருகில் தீ கொளுத்தப்பட்ட தீக்குச்சிகளும் காணப்பட்டதால், இது நாசகார வேலையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X