2025 மே 07, புதன்கிழமை

வடிகானை துப்புரவு செய்யுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடி கடைத்தெரு வடிகான் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாத நிலையில்  நுளம்புப் பெருக்கம் காணப்படுவதாக கடைத்தெரு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்த வடிகானில்; கழிவு நீருடன் பேணிகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொலித்தீன் பைகள், இளநீர்க்; கோம்பைகள் உட்பட பல்வேறு கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக கவனத்திற்கொண்டு இந்த வடிகானை துப்புரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பதில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, 'இந்த வடிகானை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X