2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடிகான் வசதி வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 15 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை 171 ஏ கிராம அலுவலர் பிரிவில் வடிகான் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் வீதியைப் புனரமைக்குமாறு கோரியும் சனிக்கிழமை (14) மாலை வெள்ளநீருக்குள் நின்று அம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு வடிகான் வசதியின்மை காணப்படுகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்கின்ற  மழை காரணமாக இங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களின்  வசிப்பிடங்களுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால், வசிப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நொச்சிமுனை 171 -ஏ கிராம அலுவலர்  ஆர்.கோகுலதாஸ் அவ்விடத்துக்குச் சென்று வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டதுடன், மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அக்கிராம அலுவலர் தெரிவித்தார்.

இதன்போது தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கிராம அலுவலரிடம் பொதுமக்கள் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X