2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வடக்கில் பஸ் சேவை முடக்கம்: கிழக்கில் தடங்கலில்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மகாண போக்குவரத்துச் சபை தொழிற்சங்கம் மேற்கொள்ளும்  பணிப்புறக்கணிப்பால் அவர்களால் நடத்தப்படும் பஸ்சேவைகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் சகல பஸ்  சாலைகளிலிருந்தும் வடக்குக்கான பஸ் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போக்குவரத்துச் சாலைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலுமிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா,  மன்னார், தலைமன்னாருக்கான இலங்கைப் போக்குவரத்துச் சேவைகள், இன்று (30) தடையின்றி இடம்பெற்றன.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, தமது பஸ்சேவைகளை இடம்பெற ஆவன செய்ததாகவும், கிழக்கு மாகாண பஸ் சாலைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வட பகுதிக்கான தனியார் பஸ் சேவைகள் அனைத்து வழமை போன்று, எதுவித தடைகளுமின்றி நாடெங்கிலுமிருந்தும் இடம்பெறுவதாக, தனியார் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X