Editorial / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், துஷாரா
மட்டக்களப்பு, செங்கலடி பாடசாலை வீதியிலுள்ள வடிகானுக்குள் இருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம், இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை விமலநாதன் (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று (17) பிற்பகல் வேளை வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றுள்ள நிலையில், இன்று காலை 6 மணியளவில் செங்கலடி பாடசாலை வீதியில் சடலமாகக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சென்று பார்த்து, சடலத்தை வைத்திய சாலையில் ஒப்படைத்ததாக அவரது மனைவி திருமதி பிரியதர்சினி விமலநாதன் தெரிவித்தார்.
கூலித் தொழிலாளியான இவர், மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த மாதம் நாடு திருப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
25 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
31 minute ago