2025 மே 09, வெள்ளிக்கிழமை

வன்முறை பற்றிய கருத்துக்கணிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் அவ்வப்போது விசுவரூபமெடுத்து நிரந்தர சமாதானத்துக்குக் கேடாக அமைந்துள்ள சமூக வன்முறைகளின் தோற்றுவாய் பற்றிய கருத்துக் கணிப்புகளை தேசிய சமாதானப் பேரவை நடத்தி வருவதாக, தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரெட்ன  தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் இந்தக் கருத்துக் கணிப்பு, மட்டக்களப்பிலும் இன்று (01) நடைபெற்றது.

இக்கருத்துக் கணிப்பில் ஆராயப்படும் விடயங்கள்  தொடர்பாக மேலும் விவரங்களைத் தெரிவித்த அவர், கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தும் சகல சமூகங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சமாதான ஆர்வலர்களிடம் பல வினாக்கள் வினவப்படுகின்றன என்றார்.

வன்முறை என்றால் நீங்கள் கருதும் அர்த்தம் யாது, மத ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட வன்முறையை எதிர்கொள்ள என்னென்ன பொறிமுறைகளைப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட கேள்விகளின் மூலம் கருத்துகளைப் பெற்று வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X