Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்ட 259 பேருக்கு நட்டஈட்டு கொடுப்பனவுகள், நேற்று (07) சனிக்கிழமை மட்டக்களப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம், புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சின் கீழ் இயங்கும், புனர்வாழ்வு அதிகார சபையினால் இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இதன்போது சேதமடைந்த 26 மத வழிபாட்டு தளங்களுக்கும், சொத்துக்கள், வீடுகள் சேதமடைந்த 85 பேருக்கும், பாதிக்கப்பட்ட அரச சேவையார்கள் 74 பேருக்கும், மற்றும் இந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 74 பேருக்கும் மொத்தமாக 20 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பை மற்றும் இந்து மத விவகார அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் புனர்வாழ்வு அதிகார சபையின் ஆணையாளர் இ.அண்ணலிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர்களான கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அராசங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago