2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Yuganthini   / 2017 மே 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு,கல்லடிக் கடற்கரையில் வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று நேற்று(10) காலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்கரையில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள்  பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, காத்தான்குடி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பத்தில் உயிரிழந்தவர் 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் என பொலிஸாரின் மேலதிக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து விசா​ரணை செய்த, மரண விசாரணை அதிகாரி என். கணேஸதாஸ், குறித்த சடலத்தை மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறும், சடலத்தை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கையை  எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில்,சடலம் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸாரால் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X