Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள், குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதை இடைநிறுத்துமாறு, கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்கு, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
வயல்களை திருத்துவது என்ற போர்வையில், வயல்கள், மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் பள்ளமாவதுடன், மேட்டு நிலப் பயிர்ச்செய்கையும் பாதிப்படைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் அவற்றின் ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிக்கப்படுவதுடன், குளத்துக்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படித் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின், அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago