Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மறைமாவட்ட மேய்ப்புப் பணிச் சபையின் வருடாந்த மாநாடும் பொது அமர்வும் இன்று புதன்கிழமை காலை சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள ஹவன் எஸ்டேட், கிளெனி மேய்ப்புப் பணி நிலையத்தில் மறைமாவட்ட ஆயர் அதிவண.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, புதிதாக அமைக்கப்பட்ட கிளெனி மேய்ப்புப்பணி நிலையமானது ஆயரார் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய மறைமாவட்ட ஆயர் அதிவண.கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கூறியதாவது,
இவ்வருடம் எமது மறைமாவட்டம், அர்ப்பண ஆண்டினை சிறப்பான பல செயற்திட்டங்கள் மூலம் சிறப்பித்தமைக்கு அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும்,திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 2016 நவம்பர் மாதம் 20ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தியுள்ள இரக்கத்தின் ஆண்டினை எமது மறைமாவட்டமும் நடைமுறைப்படுத்தும் என்றார்.
இந்நிகழ்வில் 'இரக்கத்தின் ஆண்டு' எனும் தலைப்பில் மன்னார், தோட்டவெளி தியான இல்லத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை யூட் குரூஸ் அடிகளார் உரைநிகழ்த்தினார்.
இதையடுத்து குழு ஆய்வு செய்யப்பட்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago