Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன்
வர்த்தகர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு கூறி மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திரண்ட மட்டக்களப்பு, திராய்மடுப் பிரதேச மக்கள் நேற்று வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, 'திராய்மடுப் பிரதேசத்திலுள்ள பிரபல வர்த்தகப் புள்ளியொருவர் நீண்டகாலமாக அடாவடித்தனம் புரிவதில் ஈடுபட்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்யைதினமமும் குறித்த வர்த்தகரின் அடியாட்களெனக் கூறப்படும் குழுவுக்கும் மற்றொரு குழுவுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. இந்நிலையில், சில இளைஞர்கள் குறித்த வர்த்தகரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸாருக்குத் தெரியவந்ததும் இளைஞர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வர்த்தகர் உட்பட அவரது ஆதரவாளர் ஒருவரையும் எதிர்ப்பு அணியிலுள்ள இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேரையும் கைதுசெய்தனர். எனினும், கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் காயமேற்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, காணாமல் போயுள்ளார்.
இது பற்றி அறிந்த பிரதேச மக்கள் பொலிஸாரே அவரை வேண்டுமென்று தப்பிச்செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகக்; கூறி இரவோடிரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தப்பிச்சென்ற வர்த்தகர் உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டுமென பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், உடனடியாக பொலிஸ் அணி, தலைமறைவாகிய வர்த்தகரைத் தேடும் பணியில் திராய்மடு கிராமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago