2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வவுணதீவு - நெல்லூர் கிராமம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுலுல்லாஹ் பர்ஹான்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 7.50 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு அதிகார சபையினால் புனரமைப்பு செய்யப்பட்ட வவுணதீவு-நெல்லூர் கிராமம், மக்கள் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நெல்லூர் கிராம திட்டப் பெயர் பலகையைத் திரை நீக்கம் செய்து உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்தார்.

வவுணதீவு-நெல்லூர் கிராமத்தில் பல்தேவைக்கட்டடம், வீதிப் புனரமைப்பு, 2 கல்வெட்டுகள் அமைத்தல், நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு,  சிறுவர் பூங்கா, முன்பள்ளி புனரமைப்பு மற்றும் விளையாட்டு மைதானம் புனரமைத்தல் உள்ளிட்ட 8 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X