2025 மே 07, புதன்கிழமை

வவுணதீவில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் காட்டுயானைகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சில்லுக் குடியாறு, இருமண்ட குளம், பனையறுப்பான் , நெல்லிக்காடு, குறிஞ்சையடி முன்மாரி, கால போட்டமடு மற்றும் பன்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேய காட்டுயானைகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இப்பகுதிகளில் நாளாந்தம் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியே செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் காலையில் ஏழு மணிக்கு பின்னரே தாம் வீடுகளில் இருந்து தமது வெளி வேலைகளுக்காக செல்ல வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் அரசினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், சிலர் தற்காலிக வீடுகளிலும்  வாழ்ந்துவரும் நிலையில் இவ்வீடுகளையும் காட்டு யானைகள் அடிக்கடி வந்து சேதப்படுத்தி தமக்கான குடியிருப்புகளையும் சேதப்படுத்துவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் யானைகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்,இப்பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் நெற்செய்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை தொடர்ந்து செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக யானைகளினால் தமது வாழ்வாதாரங்கள்  சூறையாடப்படுவதுடன் சிலவேளைகளில் உயிர்களும் காவுகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,யானையின் தாக்குதல்களுக்குள்ளான பகுதிகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அது தொடர்பில் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X