2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வவுணதீவு விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.துசாந்தன்

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியில் நேற்று (14) இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான வயிரமுத்து யோகலிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .