2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் சிறுமி கொலை செய்யப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 

வவுனியா, உக்குளாங்குளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர்  வன்புணர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துப்பீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.
 
'வித்தியாவுக்கு நீதி கிடைத்திருந்தால் நித்தம் ஒரு சிறுமி செத்திருக்கமாட்டாள்', மைத்திரி ஆட்சியில் கற்புக்கு நீதி எங்கே?, நல்லாட்சியில் பாலியலுக்கு அங்கிகாரமா?, 'அன்று மர்ம மனிதர்கள் இன்று காமுகர்கள்' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X