2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வவுணதீவில் ’தெய்வீக கிராமம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வரும்  'தெய்வீக கிராமம்' நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் நரிப்புல்தோட்டம் கிராமத்தில் இன்று (06) நடைபெற்றது.

இதன்போது,  வவுணதீவு பிரதேசத்தின் அறநெறிப் பாடசாலைகளிலிருந்து வருகைதந்த சுமார் 400 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், இந்து சமய வழிபாடுகள், சைவ நற்சிந்தனைகள், இந்து தர்மம், அறநெறியின் முக்கியத்துவம், கோமாதா வழிபாடு போன்ற விடயங்கள் பற்றிய உரைகளும் இந்து சமய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இங்கு வருகைதந்த அனைத்து மாணவர்களுக்கும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அப்பியாசக் கொப்பிகளும் இந்து சமயப் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்து சமய கலாசார உத்தியோகத்தர் சர்மிளா துஷ்யந்தனின் ஒழுங்கமைப்புக்கமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ. உமாமகேஸ்வரன், உதவிப் பணிப்பாளர்களான கேமலோஜினி குமரன், ஆர். கர்ஜின், சாம்பசிவம் சிவாச்சாரியார், கலாசார உத்தியோகத்தர் எம். சிவானந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X