Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரத்துக்கு வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கோடு புகையிரத ஒழுங்கை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பை ஊடறுத்து கல்முனை, அம்பாறைப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி அனுப்பும் நோக்கோடு, 33 அடி அகலமான இருவழிப்பாதையை அமைப்பதற்கு குறுக்காக இருந்த வதிவிடக் கட்டடம் உடைக்கப்பட்டு, அதை நிர்மாணித்துக் கொடுக்கும் நோக்கோடு, புதிய கட்டடத்துக்கான அடிக்கல், இன்று (11) நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர யேமர் தி. சரவணபவன், பிரதி மேயர் கே.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அரசடி 10ஆம் வட்டார உறுப்பினரும் மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதனின் பிரேரணைக்கு அமைவாக 08 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீதி விரிவுபடுத்தப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
47 minute ago
5 hours ago