2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வாகனங்களால் மாணவர்களுக்கு சிரமம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பகுதியிலுள்ள சில வீதிகளில், கிழமை நாட்களில் காலை வேளையில் கல், மண் ஏற்றிய கனரக வாகனங்கள் செல்வதால், பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பாதசாரிகளும் , அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காலை 6.45 மணி தொடக்கம் 8 மணிவரையான காலப்பகுதியில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்திலேயே, இந்த வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன எனத் தெரிவிக்கும் மக்கள், இதனால், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு, தாமதமாகுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில், காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் கவனம் செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X