Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, எஸ்.எம்.எம்.முர்ஷித், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி பிரதேசசபை அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு, மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவுசெய்யும் அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று (10) காலை நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 05 பேரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 05 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 03 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 02 பேரும், கருணா அம்மானின் சுயேட்சைக் குழு சார்பில் 02 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒருவருமாக 18 பேர் தெரிவாகியிருந்தனர்.
தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பை மேற்கொள்வது என உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் க.கணேஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.கோணலிங்கம் 10 வாக்குகளைப் பெற்று, தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் க.கணேஸ் 08 வாக்குகளைப் பெற்றார்.
உதவித் தவிசாளர் தெரிவுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் எம்.சந்திரபாலன் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் முஹமட் தாஹீர் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் எம்.சந்திரபாலன் 10 வாக்குகளைப் பெற்று உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட முஹமட் தாஹீர் 08 வாக்குகளைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago