2025 மே 19, திங்கட்கிழமை

‘வாக்குச் சீட்டுகளில் வி.ஐ.பி என எழுத தீர்மானம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 21 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் வேலையில்லா பட்டதாரிகள் என எழுதி அதிருப்தியை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டம் சனிக்கிழமை (20) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வேலையில்லா பட்டதாரிகளாகிய நாங்கள் கடந்த ஆண்டு மட்டக்களப்பு நகரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடாத்தியபோது, அரசியல்வாதிகள் பலரும் எங்களிடம் வந்து அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலைகிடைக்கும் என்ற உத்தரவாத்தை வழங்கியிருந்தார்கள். ஆனால் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்.

 “மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் 1,500 வேலையில்லாப் பட்டதாரிகள் இருக்கின்றோம். எனவே, எமக்கான அரசாங்க தொழிலை விரைவாக தரவேண்டும்.

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எமது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் வாக்குச் சீட்டுகளில் வி.ஐ.பி (வேலையில்லா பட்டதாரி) என எழுதி, அந்த வாக்குச் சீட்டை செல்லுபடியற்ற வாக்குச் சீட்டாக மாற்றவுள்ளோம்.

“இந்தத் தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயற்படமாட்டோம். யாருக்கும் வாக்களிக்கவும் மாட்டோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X