2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாய்பேசமுடியாத பெண்ணை வன்புணர்ந்தவர் கைது

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் 32 வயதுடைய வாய்பேசமுடியாத பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், இன்று (09) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த குறித்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த வீட்டில் தாயும் மகளும் இருந்துவந்த நிலையில் தாய், மரண வீடொன்றுக்குச் சென்றிருந்தவேளையில், வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த 52 வயதுடைய மேற்படி நபர், அப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளாரென முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொலிஸார், குறித்த நபரை, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X