Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஜூலை 27 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரிய நாட்டின் 1,600 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன், வாழைச்சேனை கடதாசி ஆலை புனரமைக்கப்படவுள்ளதாக, கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (26) இது குறித்தான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர், வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்றுத் தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டுப் பிரிதிநிதி கிம் டக் ஜோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் புனரமைப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு, ஆலை புத்துயிர் பெறும் சந்தர்ப்பத்தில், ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என பிரதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
50 minute ago
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
6 hours ago