Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை மீளக் கட்டியெழுப்பபுவதற்கு 38 மில்லியன் டொலர் நிதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - ஐயன்கேணி ஸ்ரீ நாகதன்பிரான் ஆலய மூலஸ்தான கட்டடத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை மீள் கட்டியெழுப்பபுவதற்கான நிதி வழங்குநர், எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டுக்கு வருகிறார் என்றார்.
இதற்கான அமைச்சரவை அனுமதி விரைவாக வழங்க வேண்டுமென, பிரதமரைத் தான் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதற்கு ஆதரவு வழங்க முன்வைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்தத் தேசியக் கடதாசி ஆலையைக் கட்டியெழுப்பி, மூவின மக்களும் தொழில் செய்யும் வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் யோகேஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் சிறிய தொழிற்பேட்டைகளை அமைக்க நடவடிக்கையெடுத்து வருவதாகவும் விசேட தேவையுடையோர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்மொழிவுகளை தாங்கள் அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025