2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புதிய தீர்மானங்கள் அமுல்

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சிலர் வெளியிடங்களுக்குச் செல்வதால், சுகாதார பாதுகாப்பு திணைக்களத்துக்கும் பொலிஸாருக்கும் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகதால், இவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதென்று, பிரதேச உயர் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படுத்தப்பட்டதை அடுத்து, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில், இன்று (28), பிரதேச உயர் மட்ட அதிகாரிகளுக்கான விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே. மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு, வாழைச்சேனை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு ஆகியவற்றில் அன்றாட தொழிலாளர்கள் அதிகமாக காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கச் செய்வதுடன், அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
 
இதேவேளை, பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் ஊடாக எதிர்வரும் 15 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கையிருப்பில் இருப்பதாக, வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளதென்று, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் இதன்போது தெரிவித்தார்.
 
மேலும், நவம்பர் 2ஆம் திகதி வரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எந்தவிதமான பொருள்களும் வெளியிலிருந்து வருவதற்கும், பிரதேசத்தில் இருந்து வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருள்கள் தேவைப்படுவோர் அன்றாட உணவு வகைகளுக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குழுவின் ஊடாக அல்லது கிராம சேவகர்களுக்கு அறிவித்து பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நவம்பர் இரண்டாம் திகதி வரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வயல் வேலைகளுக்கு செல்லவோ, மீன் பிடி தொழில்களுக்கு செல்லவோ முடியாதென்றும்; தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .