Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில், 531 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனவென, வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் திங்கட்கிழமை மாலை முதல் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக மழை ஓய்ந்து சீரான வானிலை நிலவியதன் காரணமாக, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதுடன், உறவினர்கள் வீட்டில் இடம்பெயர்ந்த மக்களும் தமது இருப்பிடம் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் மக்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணன்கிராமம், விநாயகபுரம், சுங்கான்கேணி, கறுவாக்கேணி, ஆஞ்சனேயர்புரம், கிண்ணையடி, முறாவோடை, நாசிவந்தீவு உட்பட பட இடங்களின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் சில இருப்பிடங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதன்காரணமாக, பெரும்பாலான மக்களின் அன்றாடத் தொழில், பல்வேறு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப் பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026