Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு- வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை புதன்கிழமை (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்த மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டு ஒப்படைத்துள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான புதன்கிழமை (21) அதிகாலை 4 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது அங்கு போதை பொருளுக்கு அடிமையான இருவர் பிரபல வியாபாரியிடம் போதை பொருள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் அங்கு சென்ற வியாபாரி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாறு வேடத்தில் கண்காணிப்பில் இருந்த பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதன் போது வியாபாரியிடம் இருந்து 4 கிராம் ஐஸ்போதை பொருளையும், ஏனைய இருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் மற்றும் 200 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருள்களையும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
20 minute ago
22 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
22 minute ago
22 minute ago