2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் தொடர்ந்தும் பிசிஆர்

Princiya Dixci   / 2020 நவம்பர் 17 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலெழுந்தவாரியாக 230 நபர்களுக்கு, இன்று (17) பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

இதன்படி, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 120 நபர்களுக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 50 நபர்களுக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மேலெழுந்தவாரியாக 60 நபர்களுக்குமாக 230 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 59 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 8 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 6 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இருவரும், கிரான், வெல்லாவெளி, ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒருவருமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 80 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X