2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் பெண் கொடூர கொலை

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண்ணொருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று, இன்று (11) இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு, பிறைந்துரைச்சேனை, உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (வயது – 60) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிமையில் வசித்து வந்த இவரை, இன்று காலை உறவினர்கள் வந்து பார்த்த போது, கதவு திறந்த நிலையில், வீட்டின் படுக்கை அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக்கண்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொலையை செய்தவர்கள் என்ன நோக்கத்துக்காக செய்தார்கள் என்றும் இவரது வீட்டில் பொருள்கள் ஏதும் கொள்ளையிடப்பட்டுள்ளதா என்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .