பேரின்பராஜா சபேஷ் / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டுப்பசளை, திரவப்பசளை தயாரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டத்தை, மாவட்ட விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, விவசாய போதனாசிரியர் எஸ்.சுதாகரன் தலைமையில் குடும்பிமலை, ஈரளக்குளம், விற்பனைமடு பிரதேசத்தில் இன்று (28) நடைபெற்றது.
மட்டக்களப்பு வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், சோலை சேதனப்பசளையும் அறிமுகம் செய்யப்பட்டது.
இரசாயனப் பசளையின் பயன்பாட்டைக் குறைத்து, சேதனப்பசளை, இயற்கைத் திரவப் பசளையைப் பாவிக்கும் நோக்குடன், இப்பசளைகளை உற்பத்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்குக் காண்பிக்கப்பட்டது.
அத்துடன், நெல் உள்ளிட்ட தானியப்பயிர்கள், வீட்டுத்தோட்டத்திலும் பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தக்கூடிய கற்பூரக்கரைசல் தயாரிக்கும் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய உற்பத்தியாளர்கள், சம்மௌன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .