Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் பாடத்துறைக்குரிய தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது,
இது தொடர்பாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2017ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற விஞ்ஞான பாடத்திட்டத்துக்கிணங்கவும், 2019ஆம் ஆண்டிலிருந்து க.பொ.த (உ/த) பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகவும் பொறுப்புக்கூறலுடனான வகைசொல்லல் பற்றி விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களுக்கு கல்வி அமைச்சால் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரமான கல்விக்கான இப்பாடத்துக்குரிய ஆசிரிய ஆலோசகர்கள் விஞ்ஞான பட்டதாரியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப்பாடத்துக்குரிய ஆசிரிய ஆலோசகர்கள் பெரும்பாலானோர் கலைப்பட்டதாரியாக உள்ளமை தெரியவந்துள்ளது.
இது தேசிய கல்விக் கொள்கைளை நடைமுறைப்படுத்துவதற்கும் உயர்தரத்துக்கு விஞ்ஞான மாணவர்களைத் தயார்படுத்துவதற்கும் தடையாக உள்ளது.
கல்வி அமைச்சின் 16/2018 ஆம் இலக்க 2018.03.20 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள கற்றல் பெறுபேறுகளின் ஊடாக உரிய விடயப்பரப்புகளின் கீழ், கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய எல்லைகளை மாணவர்களுக்கு தயார்படுத்துவதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் தேசிய கொள்கைளை நடைமுறைப்படுத்துவதற்கும் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் பங்கு முக்கியமானது.
ஆயினும், இத்தேசிய கொள்கையை, கலைப்பட்டதாரிகளால் முன்னெடுக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்டோர் கவனத்திற்கொள்ள வேண்டும்” என்று தனது அறிக்கையில் பொன்னுத்துரை உதயரூபன் குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago