2025 மே 09, வெள்ளிக்கிழமை

’விடியலைத் தேடும் விடிவெள்ளி’ விழிப்புணர்வு நிகழ்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கன்னங்குடா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில், “விடியலைத் தேடும் விடிவெள்ளி ”எனும் தொனிப்பொருளில் உளநல விழிப்புணர்வு நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு  உளநல உதவி நிலையத்தின் இயக்குநர் அருட்தந்மை போல் சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், வவுணதீவு  பிரதேச செயலக அலுவலர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலக உளநல தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தால், இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இங்கு இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகளில் உளநலம், மன அழுத்தம் பற்றிய விடயங்களைப் பிரதிபலிக்கும் விழிப்பூட்டல் நாடகம் நடைபெற்றதுடன், அருட்தந்தை போல் சற்குணநாயகத்தால் உளநலம் தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X