Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள சகல தனியார் கல்வி நிலையங்களையும் பாலர் பாடசாலைகளையும் மூடி, பாடசாலை மாணவர்கள் விடுமுறையைக் கழிக்க வழி செய்யுமாறு, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிசெம்பர் மாதம் பாடசாலைகளுக்கான விடுமுறை மாதம் என்பதால், இந்தக் காலத்தில் மேற்படி பிரத்தியேக கல்வி நிலையங்கள், அல்குர் ஆன் மதராசக்கள் என்பவற்றையும் மூடி, மாணவர்கள் அவர்களின் விடுமுறையை கழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
இன்று (02) தொடக்கம் ஜனவரி (2020) மாதம் 3ஆம் திகதி வரையும் இந்த ஒழுங்குமுறையைப் பின்பற்றுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .