Janu / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு - திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எச்.எம்.எம்.பர்ஸான்

28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago