2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - காயாங்குடா பிரதேசத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில்    19 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரம் ஒன்றில்  மணல் ஏற்றிக்கொண்டு சென்ற போது, சாரதிக்கு அருகில் அமர்ந்து வந்த இளைஞனே தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்குண்டு இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தம்பானம்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபாகரன் லவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X