எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை, கறுவாக்கேணி பாடசாலை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனரென வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
மீராவோடையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் சுங்கான்கேணியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே, இவ்வாறு இன்று (30) காலை விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் காயமடைந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓட்டமாவடி அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அப்துல் அலீம் ஷலாஹ் (வயது 58) என்பவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்த மீராவோடை ஆர்.சி. வீதி அறபா ஒழுங்கையில் வசிக்கும் எம்.ஏ.எம்.சுந்துஸ் (வயது 25), சுங்காங்கேணி எல்லை வீதியைச் சேர்ந்த சி.ரமேஸ் (வயது 36) ஆகியோர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago