2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, செட்டிபாளையத்தில், இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதோடு, மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளாரென, களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த லொறியும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், இம்மரணம் சம்பவித்துள்ளது.

பட்டா ரக வாகனத்தில் பயணித்த காவத்தைமுனை, பனிச்சையடி வீதியை அண்டி வசிக்கும் அலியார் நூர்ஜஹான் (வயது 46)  என்பவரே  விபத்தில் சிக்கி மரணித்தவராவார்.

சடலம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பில் களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X