Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா
தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன், எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்ற விபத்தில் புதிய காத்தான்குடி 6, அக்பர் பள்ளி வீதியை அண்டி வசிக்கும் 12 வயதுடைய பள்ளிச் சிறுவனான முஹம்மது அலியார் முஹம்மது ருஷ்கி என்பரே பலியானவராகும்.
இந்த விபத்துப்பற்றி மேலும் தெரியவருவதாவது,
வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அதன் டயரில் காற்று சடுதியாக வெளியேறிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவை மோதியுள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் ஓட்டோவுக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவன் மீது ஓட்டோ மோதியதால் சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம், உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago