Freelancer / 2023 மார்ச் 28 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (27) 9.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்த சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் அன்பாஸ் (17 வயது) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த வான், சைக்கிளில் வந்த மாணவன் மீது மோதி விட்டுத் தப்பிச்சென்றுள்ளது. இதன்போது, வானின் இலக்கத்தகடு கழன்று கீழே விழுந்துள்ளது.
விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனின் சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (N)
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025