Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - பதுளை வீதி கொடுவாமடுவில் இன்று (02) காலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான சிறிய ரக வாகனமொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியருகில் நின்றிருந்தவரை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வீதியில் நின்றிருந்த ஒருவரும் லொறியில் பயணித்த மூவருமாக நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர், செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏனையவர்கள், செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago