ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர், ஐயங்கேணி, ஜின்னா வீதியால் ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி, வீதியருகிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளாரெனவும் இருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மஹ்மூதுலெப்பை சித்தி ஜெஸீமா (வயது 55) என்பவரே, இன்று (29) உயிரிழந்துள்ளார்.
மேலும், முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற நூர்முஹம்மது மௌஜுத் (வயது 36), மற்றும் அவரது மனைவியான மஹ்மூதுலெப்பை அஸ்மியாபானு (வயது 34) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலையில் ஆளுநரால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுக்கொண்டு, இறந்தவரின் மகளான அஸ்மியாபானு குடும்பத்தாரோடு, வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே வீட்டை நெருங்கும் வேளையில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago