எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை - விபுலானந்தர் வீதியில், விபுலானந்தர் சிலையை அமைத்தல் மற்றும் வாழைச்சேனை பொது மைதானத்துக்குப் பெயர் சூட்டுதல் தொடர்பான மகஜரை, வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்திடம், பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் கையளித்தார்.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வாழைச்சேனை - விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள விபுலானந்தர் சிலை, தனியார் காணியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து அச்சிலையை அகற்றி, விபுலானந்தர் வீதியிலுள்ள பொது இடத்தில், புதிதாக நிறுவ வேண்டுமென, ஊர்ப் பொதுமக்கள், தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“அத்தோடு, வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேசத்துக்குச் சொந்தமான பொது மைதானத்துக்கு நாமமொன்றைச் சூட்டுவதற்கு, தங்கள் ஒத்துழைப்பை வேண்டி அறிக்கையொன்றை சமர்ப்பிக்கின்றேன்.
“முன்னாள் தவிசாளர் கணபதிப்பிள்ளை கனகரெத்தினம், 1974இல், 03 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்து, பொது மைதானத்தை அமைத்து, மக்கள் பாவனைக்கு ஒப்படைத்தார். அதுமாத்திரமன்றி, கிட்டத்தட்ட 15 வருடங்களாக, பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
“அவரது சேவையைக் கௌரவப்படுத்தும் வகையில், பொது மைதானத்துக்கு சேர்மன் கனகரெத்தினம் என்னும் நாமத்தைச் சூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை, குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என, மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago