Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 12 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
“தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் கல்லடிப் பாலத்தை,வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 01ஆவது விசேட அமர்வில் தலைமையுரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன்மூலம், எமது வேகம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதுடன் எமது மாநகரசபையின் ஆளணிகளையும் சேர்த்துக் கொள்ள முடியும். இந்த அடிப்படையில் தான் எமது விசேட கூட்டத் தொடர் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அத்துடன், இந்தக் குறுகிய காலத்துக்குள் நாங்கள் பல முன்னெடுப்புகளை ஆரம்பித்துள்ளோம். அதன் பலனாக முதற்கட்டமாக பல பிரதேசங்களில் வீதி விளக்குகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் எங்களுக்குப் பாரிய சவாலாக இருப்பது ஆளணி பற்றாக்குறை. இதன் காரணமாக இந்தச் செயற்பாட்டை வெளி வளப் பெறுகைச் செயற்பாட்டின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என நினைக்கின்றேன்.
“தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் எமது கல்லடிப் பாலத்தினை வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றின் ஆதரவுடனும், அணுசரணையுடனும் இந்தச் செயற்பாடுகளை முன்நகர்த்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அதேபோன்று, சத்துருக்கொண்டான் பறவைகள் சரணாலயத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
“இவ்வாறு பல முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப நிலையில் உள்ளன. இதனை மேலும் கொண்டு செல்வதற்கு அனைவரது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025