Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் களுமுந்தன்வெளியில் இன்று (26) விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிடம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பேரணியொன்றையும் முன்னெடுத்தனர்.
இதன்போது, சாத்தியமான அனைத்து இடங்களிலும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப யுக்திகளைக் கையாண்டு, பயிர்ச் செய்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக, அப்பகுதிவாழ் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.
மேலும், அப்பகுதியில் குறைந்த நீர் விரையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயப் பண்ணையை, விவசாயிகள் பார்வையிட்டதோடு மாணவர்களும், விவசாயம் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில், விவசாயப் போதனாசிரியர் என்.விவேகானந்தராஜாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் மங்களகேசரி சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.சிவபாதம், மாணவர்கள், விவசாயிகள், மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago