2025 மே 07, புதன்கிழமை

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஷ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (18)  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்,  மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

இம்முறை நெல் கொள்வனவில் இடம்பெற்ற அசௌகரியங்கள் தொடர்பாக மாவட்டச் செயலாளரிடம் தெளிவுபடுத்தியதுடன், எதிர்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்ற நெற்களை உலர்த்துவதற்கு (காய வைப்பதற்கு) இடவசதியை ஏற்படுத்தித் தருகின்ற சந்தர்ப்பத்தில், விவசாயிகளுக்கு நன்மை பெறுகின்ற செயலாக அமையுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, வாகரைப் பிரதேச கட்டுமுறிவுப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கான வழிகளைப் புனரமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த விவசாயக் குழுக்கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகனாத், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஜ்வரன், வங்கிகளின் முகாமையாளர்கள், விவசாயத் துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X