2025 மே 01, வியாழக்கிழமை

விவசாயிகளின் வேண்டுகோள் அதிகாரிகளால் நிராகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்றுமாறு, அம்பாறை மாவட்ட விவசாயிகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று, நற்பிட்டிமுனை, கிட்டங்கி, நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள்  முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரோடு தொடர்புகொண்டு கருத்துப் பரிமாறியுள்ளனர்.

இதன் அடிப்படையில், மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் முகத்தை திறந்து விடுவதைப்பற்றி கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி  தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (27)  நடைபெற்றது.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் வன்னியசிங்கம் கலைவாணி குறிப்பிடுகையில், சாதாரணமாக 112 மில்லி மிற்றர் நீர் நிரம்பியதன் பின்னர்தான் முகத்துவாரம் திறப்பது தொடர்பில் ஆராயப்படும். தற்போது 40 மில்லிமிற்றர் இருப்பதனால் முகத்துவாரத்தைத் திறப்பதற்கான அவசியம் இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .