எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 மார்ச் 25 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றூகம் கிராமத்தில், 43 புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவால், மார்ச் 30ஆம் திகதியன்று காலை நாட்டப்படவுள்ளது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக, இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இதேதினத்தில், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராகேணி கிராமத்தில், பல தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மீள் எழுச்சிக் கிராமத்திலுள்ள 30 வீடுகளைப் புனரமைத்து, அங்குமேலும் 30 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள், ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்றுத் தவிசாளர்கள், இரு பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள், உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் இவற்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .