Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் தடைப்பட்டு நிற்கும் தாழ்நிலப் பகுதி வெள்ள நீரை வடிந்தோட வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
இதன்படி, மட்டக்களப்பு மாநகர சபைக்குள்ளடங்கும் நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட புதிய காத்தான்குடி, ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பரிவிலுள்ள ஐயங்கேணி, மீராக்கேணி, சதாம்ஹுஸைன் கிராமம், செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள வந்தாறுமூலை, செங்கலடி, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் உட்பட சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தாழ்ந்த பிரதேசங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்றுமாறு, மாவட்டச் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை, வெள்ள நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்களுக்கு நேரில் சென்ற மாவட்டச் செயலாளர், வெள்ள நீரை வடிந்தோடச் செய்யும் பணிகளைப் பார்வையிட்டு, அவ்வப்பகுதி மக்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, மேலதிகமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், அதிகாரிகளுக்குப் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .