எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உலர் உணவுப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக, மேற்படிச் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில், “பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பள்ளிவாசல்கள் மூலமும் தனவந்தர்களின் உதவியுடனும் சமைத்த உணவுகள், நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
“மேற்படி, நிவாரண உதவிகளை ஒருமுகப்படுத்துமுகமாக, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா, நகர சபை, பிரதேச செயலகம், அனைத்துப் பள்ளிவாசல்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களை உள்ளிடக்கியதாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“எனவே, பொதுமக்கள், தனவந்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தங்களது உதவிகளைப் பணமாகவோ அல்லது பொருளாகவோ சம்மேளனக் காரியாலயத்தில் ஒப்படைத்து, பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .