Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் வடிந்தோட முடியாத வகையில் அடைத்து வைத்துள்ள நபர்களுக்கு எதிராக, கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று, மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 27ஆவது சபை அமர்வானது, நேற்று (5) காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில், பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு - செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள், மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.
அமர்வின் விசேட அம்சமாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை அடைமழையாக வலுவடைந்துள்ளதுடன் காரணத்தால் வெள்ள நீரை துரிதமாக வெளியேற்றும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும் உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக தோணாக்களையும் வடிகான்களையும் பலர் அடைத்து வைத்துள்ளமையால், வெள்ள நீரானது வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாக உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவ்வாறு சட்டவிரோதமாகவும் அனுமதியற்ற முறையிலும் அடைத்து வைத்து உரிமைகோரும் நபர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்தார்.
அத்துடன் இந்த அனர்த்த நிலமைகளில், மாநகர சபையின் அபாயக் குறைப்பு முன் ஆயத்த குழுவானது எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு மேலதிகமாக மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, அனைத்து உத்தியோகத்தர்களும் அனர்த்த அபாயக் குறைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் குமாரசாமி காந்தராஜாவால் ஏனைய 10 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கொண்டுவரப்பட்ட மாநகர முதல்வரின் நிதி அதிகாரங்களை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணையானது 15 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், இரண்டு வாக்குகள் நடுநிலையாகவும் இடப்பட்டிருந்தன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .